காங்கிரஸில் இருந்த போது குஷ்பு மோடி என்றால் ஊழல், மோடி என்று அர்த்தத்தை ஊழல் என்று மாற்றுவோம்… என்று 2018 பதிவிட்ட இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி புது சர்ச்சை ஏற்படுத்தியது.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வயநாடு எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ராகுல் காந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலைகள் தான்அதே ஆண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு குஷ்பூ அப்பொழுது மோடிக்குப் போட்ட ட்விட் தனது அரசியல் வாழ்க்கைக்கு வினையாக மாறி உள்ளது.
அப்போதைய ஆட்சிக் காலத்திலிருந்த குஷ்பூ எங்குப் பார்த்தாலும் மோடி எங்குத் திரும்பினாலும் மோடி. மோடி என்ற பெயர் வைத்துள்ளவர்கள் அவள் தான் அதிகம் ஊழல் செய்துள்ளார்கள். மோடி என்ற பெயருக்கு ஊழல் என்று மாற்றி விடுவோம் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த டிவிட்டிற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் ராகுல் பேசியது தவறு என்றால் குஷ்பு செய்ததும் தவறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக உறுப்பினர் குஷ்பு, எனது ஐந்து வருடப் பழைய டிவிட்டைப் பற்றி காங்கிரஸ் கட்சி பேசுவது அவர்களது அவநம்பிக்கையுடன் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்த பொழுது மோடிக்கு எதிராகப் போட்டதற்கு நான் வெட்கப்படவில்லை. அப்பொழுது எந்த கட்சியிலிருந்தேனோ அந்த கட்சியின் தலைவர்களின் ஆதரவாகவும் கட்சியின் நிலைப்பாட்டைக் குறித்துப் பேசியதாகவும் தெரிவித்தார்.
மேலும் உங்களுக்குத் தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் ஊழலுக்கும் திருடனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.