ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்றும் லாரன்ஸ் கேரக்டர் குறித்தும் பேசி இருக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் குடும்ப சண்டை, காதல் தோல்வி, விவாகரத்து, உறவினர்கள் சண்டை, அடிதடி போன்ற பல பிரச்சனைகளோடு வரும் நபர்களை உட்கார வைத்து பேசி அவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், பலர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நிகழ்ச்சியை இப்போது நிறுத்தி விட்டார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் லாரன்ஸ். இவர் இந்த நிகழ்ச்சியில் “மேடம் இது ஆக்சன் மேடம்… இது நடிப்பு மேடம்…” என்றெல்லாம் பேசிய வார்த்தைதான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. யாரை கலாய்க்க வேண்டும் என்றாலும் இவருடைய வீடியோதான் தான் அங்கு இடம் பெற்று விடுகிறது.
இந்நிலையில், லாரன்ஸ் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்றெல்லாம் கேள்வி எழுந்த நிலையில் பிரபல youtuber ஒருவர் லாரன்ஸை தேடி அவர் வேலை செய்த இடத்திற்கு சென்று இருக்கிறார். முன்னதாக, லாரன்ஸ் கோயம்பேட்டில் உள்ள ஒரு காய்கறி மண்டியில் தான் வேலை செய்தேன், அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன் என்று சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசி இருந்த நிலையில், அவரை அங்கு போய் விசாரித்ததில் அங்கு பலரும் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை கூறினார். அதாவது லாரன்ஸ் என்பது அவருடைய உண்மையான பெயர் இல்லை என்றும், அவருடைய உண்மையான பெயர் விருமாண்டி என்பதும் தெரிய வந்தது.
திருமணத்திற்கு பிறகு தான் லாரன்ஸ் என்று பெயரை மாற்றிக் கொண்டாராம் விருமாண்டி. இந்நிலையில், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குப் பிறகும் லாரன்ஸ் கோயம்பேட்டில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், மூட்டை தூக்கி சம்பாதிக்கும் பணத்தில் நன்றாக சாப்பிட்டு விட்டு, நிறைய குடித்து விட்டு வேலை செய்யும் இடத்திலேயே தூங்கிக் கொள்வாராம். ஆனால், கொரோனாவுக்கு பிறகு அவரை அங்கு வேலை பார்த்தவர்கள் பார்க்கவே இல்லையாம்.
அவர் எங்கே சென்றார், உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக இங்கு வேலைக்கு வந்திருப்பார். ஆனால் இப்போது அவருக்கு என்ன ஆனது என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை என்று அங்கு இருந்த அனைவருமே கூறி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் லாரன்ஸ் குறித்து சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை அப்போது தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில்,
“அன்னைக்கு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு லாரன்ஸ் வந்தது இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவருக்குள் அப்படி ஒரு காமெடி சென்ஸ் இருந்தது. அதனால்தான் அவர் பேசியபோதும், ஆக்சன் பண்ணுன போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம். அந்த திறமை மக்களுக்கும் தெரியணும் தான் அப்படியே ஒளிபரப்பினோம். நாங்கள் நினைத்திருந்தால் எடிட் பண்ணி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவர் பக்கம் தப்பு இருந்த போதும் கூட அவருடைய திறமையை ரசித்தோம்.
அதே நேரத்தில் அவருடைய தப்பை நியாயப்படுத்தி, அவருக்கு நாங்கள் சப்போர்ட் பண்ணவில்லை. லாரன்ஸுக்கு இருக்கிற திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரும் பெரிய காமெடியனாக வந்திருப்பார். நாங்கள் இந்த நிகழ்ச்சியை வெறும் ஷோக்காக மட்டும் நடத்திட்டு அவங்கள அப்படியே அனுப்பப்படுவது கிடையாது. பல பெண்களுக்கு நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு சுய தொழிலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
ஆனால், லாரன்ஸுக்கு எங்களோட பண உதவி தேவைப்படவில்லை. அவர் குடும்பத்தோட சேர்ந்து வாழனும் என்று ஆசைப்பட்டார். அவரை திருந்தி குடும்பத்தை ஒன்று சேர்த்தது எங்களுக்கும் அப்போ ஒரு ஆறுதலாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு லாரன்ஸ் எங்கு இருக்கிறார் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அவரோடு எங்களுக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று அந்த பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.