லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த லியோ படம் க வெளியானது. இப்படம் மக்கள் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், வசூலில் ரூ.540 கோடியை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பேசிய லியோ வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார்‘தனக்கு சினிமா ஆசை வர காரணமே விஜய் தான் என்றும், அவரின் வாழ்க்கை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும் புகழ்ந்து தள்ளினார்.

தொடர்ந்து பேசிய அவர் “எவ்வளவு உயரம் பறந்தாலும் பசி என்றால் கீழே இறங்க வேண்டும்” என்று இணையம் முழுவதும் வைரலாகி ரசிகர்களிடையே விமர்சனம் மாறியது.
இந்த நிலையில் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எழுத்து பணி உள்ளதால் நான் ஆஃப்லைனுக்கு செல்லவுள்ளேன். என்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வரும் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு இடைவெளி எடுக்க போகிறேன். விரைவில் சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார்.