மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தர்மம் தக்க பாடம் புகட்டும் என்று (kp munusamy) அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு கே.பி.முனுசாமி அளித்த பேட்டியில் பேசிய கே.பி.முனுசாமி கூறியிருப்பதாவது:-
சந்தர்ப்ப சூழ்நிலையில் பொறுப்புக்கு வந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பின்னால்தான் அவரது சுயரூபம் வெளியானது. அம்மா மறைவுக்குப் பின்னர் பதவிக்கு வந்தவரை சசிகலாவும், பன்னீர்செல்வமும் அழைத்து ராஜினாமா செய்யச் சொல்லி, ராஜினாமா செய்துவிட்டு வந்தவர், அவரது உண்மையான சுயரூபம் வெளியானதால், அம்மாவின் சமாதியில் போய் உட்கார்ந்துவிட்டு, சில உண்மைகளை சொல்வதாகக் கூறினார்.
இதனால் ஓ.பி.எஸ். அம்மாவுக்கு உண்மையாக இருப்பதாக எண்ணித்தான் அவருடன் இணைந்து என்னைப் போன்றவர்கள் பணியாற்றினோம். அதனால்தான் தர்மயுத்தம் என்னும் பெயரில் அம்மாவின் மறைவு குறித்து விசாரணை வைக்க கேட்டோம்.
Also Read : https://itamiltv.com/aiadmk-candidates-are-being-attacked-by-their-own-party-savukku-shankar/
இந்தச் சூழலில் மீண்டும் பொறுப்புக்கு வர நினைத்து, தனது தர்மயுத்த கோரிக்கையை எல்லாம் ஓரம் கட்டிவைத்து, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். ஆட்சியில் இருக்கும்வரை அமைதியாக இருந்தவர் மீண்டும் பொதுத்தேர்தல் வந்தபோது யார் முதலமைச்சர் என்னும் கேள்வி எழுந்ததும் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் தொடங்கினார்.
அப்போது அவரிடம் எடப்பாடியாரின் செயல்பாடுகளையும் கட்சியில் அவருக்குஇருக்கும் ஆதரவினையும் எடுத்துச் சொல்லித்தான், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் வாயாலேயே அறிவிக்கச் செய்தோம். அந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்னும் பெருந்தலைகள் இல்லாமல் நான்கே ஆண்டுகள்முதல்வராக இருந்து கட்சியை கட்டுக்குள் கொண்டுவந்து 75 இடங்களை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தனித்திறமை இருப்பது புலனாகிறது.
இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியின்கீழ் பணியாற்றுவதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தார். அந்த நேரத்தில்தான், அம்மா மரணம் தொடர்பாக யாரையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று தர்மயுத்தம் நடத்தினாரோ, அந்த சசிகலா அம்மையாரையே தலைவராக ஏற்று அவருக்குப் பின்னால் பணியாற்றுவதற்கு தயாராக இருந்தார்.
அதனை எங்களைப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில்தான், கட்சிக்கு இரண்டு தலைமை வேண்டாம். ஒற்றைத் தலைமை போதும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து சொல்லப்பட்டு, பொதுக்குழுவில் முடிவும் எடுக்கப்பட்டது.
Also Read: https://itamiltv.com/govt-doctor-under-attack-shocking-news-from-puducherry/
ஆனால் அந்த பொதுக்குழுவுக்கு எதிராகவே ஓ.பன்னீர்செல்வம் சில நடவடிக்கைகளை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுக தலைமைக் கழகத்துக்கு , சமூக விரோத சக்திகளுடன் சென்று இடித்துவிட்டு, வெளியேறினார். அதற்கு முன்னதாகவே பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற்றி முடிவு எடுத்துவிட்டார்கள்.
இதற்குப் பின்னர் அதிமுகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று துடித்தார். ஆனால் முடியவில்லை. அதற்குப் பிறகு இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற நடத்திய போராட்டமும் கைகொடுக்கவில்லை.
தர்மம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அதர்மமாக நடந்து கொண்டார். (kp munusamy) ஆனால் அவருக்கு தர்மம் சாட்டையடி கொடுத்திருக்கிறது. அந்த சாட்டையடி காரணமாக, இன்று யார் இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களோடு இணைந்து தேர்தல் களத்திலே இருக்கிறார். நிச்சயமாக அந்த தர்மம் அவருக்கு தக்க பாடத்தை வழங்கும் என தெரிவித்துள்ளார்.