மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும் என வி.கே.சசிகலாVK sasikala
கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்களித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதல் – பரபரப்பு!
அந்த வகையில், ஆர்.கே.சாலை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வி.கே. சசிகலா தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி தப்பு கணக்கு போட்ட அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும்.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும் என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சுட்டிக்காட்டி சாடினார்.