Lok Sabha Elections Song : நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக பொதுமக்களிடம் வாக்குப்பதிவு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க : “நார்த் இந்தியா கம்பெனி பாடாய் படுத்துது!” – கோவையில் கமல்ஹாசன் பிரச்சாரம்!
அந்த வகையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மாதவன், ரவீணா டான்டன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பாடியுள்ளனர்.
அந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Lok Sabha Elections Song : தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பாடலின் தமிழ் வரிகள் இதோ..
நான் பாரதம்..
பாரதம் என்னுள்ளே..
நான் சக்தியே..
சக்தி என்னுள்ளே..
இதையும் படிங்க : இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், விழிப்புணர்வு பாடல்! Lok Sabha Elections Song!