முன்னதாக அமலாக்கத் துறையால், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் (senthil balaji case) கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரண்டு அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயனுக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று வழக்கு (senthil balaji case) விசாரணை நடைபெற்றது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திக்கேயன் தீர்ப்பை வாசித்தார்.
அந்த தீர்ப்பில், ‘போக்குவரத்து துறையில் வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். பணம் யார் மூலமாக யாரிடம் சென்றது. அதை எப்படி மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்டவரை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய உரிமை இல்லை என்ற கபில் சிபல் வாதம் சரியானது.
அமலாக்கப்பிரிவினர் காவல்துறையினராக கருத முடியாவிட்டாலும் அவர்கள் புலன் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்
தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் காவல் எடுக்க வேண்டியது அவசியம். கஸ்ட்டடி வழங்கி பரத சக்கரவத்தி உத்தரவு தான் என் உத்தரவும்’ என்று தெரிவித்துள்ளார்.