மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி வரும் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21 ஆம் தேதியும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த சித்திரை திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது காலை வெள்ளி சிம்மாசனத்திலும் மாலை தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் அம்பாள் மாட வீதிகளில் உலா வருவார்.
இதனை தொடர்ந்து,ஏப்ரல் 22 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உற்சவமும் அன்றைய தினம் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும்.
இதையும் படிங்க: மதுரை கள்ளழகர் திருவிழா – நீர் பீய்ச்சி அடிக்க கடும் கட்டுப்பாடு..!!!
மேலும் ஏப்ரல் 23 ஆம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மதுரை மாநகருக்கு வருகை தருவார்கள்.
இந்த நிலையில்வைகை ஆற்றின் கள்ளழகர் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மதுரை மாநகரில் 23042024 (செவ்வாய்க்கிழமை) அன்று அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளவிருப்பதால், அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.
மே 2024 மாதத்தில் 11-ம் தேதி (1105,2024 சனிக்கிழமை) விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடு செய்யப்படும்.
11052024 அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், வங்கிகளும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.