மதுரையில்(madurai) தரமற்று போடப்பட்டு இருந்த சாலை பார்த்து கொதிப்பு அடைந்த மாவட்ட ஆட்சியர் வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை(madurai) மாவட்டத்தில் வாடிப்பட்டி ஊராட்சி முதல் குலசேகரன் கோட்டை வரை சுமார் 1 1\2 கிலோமீட்டர் வரை தூரத்திற்கு வாங்கி உதவியுடன் ரூபாய் 1கோடியே 10 லட்சம் செலவில் தார் சாலை போடப்பட்டது.
ஆனால் அந்த சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாகவும்,காலால் மிதத்தாலே பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை தரம் இருப்பதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டினார். இதனையடுத்து இந்த சமபவம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது சாலைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் ஒப்பந்ததார அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த சாலைக்கு வெள்ளை கோடு போடபடும் என்று தெரிவித்தார்.
மேலும் ஒழுங்கு முறையில் சாலைகளை அமைக்காத ஒப்பந்ததார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதிகாரிகளிடம் கொதிப்பு அடைந்த மாவட்ட ஆட்சியர் வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.