திருப்பதி(Tirupati) அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ரயில் ஓட்டுநரின் சாமர்தியத்தால் ரயில் நிறுத்தப்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டு சென்ற ராமேஸ்வரம் திருப்பதி பயணிகள் ரயில், திருப்பதிக்கு சென்ற போது, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பாக்காலா ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.
தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை கவனித்த ரயில் பைலட் ரயிலை உடனடியாக ரயிலை நிறுத்தி விட்ட நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களை வர வழைத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சரி செய்தனர்.
இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு ரயில் திருப்பதி ரயில் நிலையம் சென்று சேர்ந்தது.இதன் காரணமாக அந்த மார்க்கத்தில் ஒரு மணி நேரம் ரயில்கள் காலதாமதமாக செல்கின்றன.