Malaysiaமலேசியாவில் அல்லாஹ் என்று அச்சிடப்பட்ட சாக்ஸ்களை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள புச்சோங்கில் செயல்படும் கேகே மார்ட் என்னும் சூப்பர் மார்க்கெட் கடையில் அல்லாஹ் என்ற வார்த்தையுடன் கூடிய காலுறைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துவதாக அங்கு பரபரப்பு கிளம்பிய நிலையில், சூப்பர் மார்க்கெட்CEO சாய் கீ கான் மற்றும் அவரது மனைவி, நிறுவன இயக்குனரான Loh Siew Mui ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: pakistan | ”ஆடையில் அரபிய எழுத்துக்கள்.. ”பாகிஸ்தானில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!
சூப்பர்மார்க்கெட் தரப்பில் சப்ளையர் சின் ஜிஆன் சாங் என்பவர் உள்பட மூன்று பேர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு மலேசியாவின் மன்னரின் கவனத்துக்கு சென்றதையடுத்து, கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் கேகே சூப்பர் மார்ட் நிர்வாகிகள் ஐந்து பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: Strange Incident : விடிய விடிய மீன்களின் லீலை.. தூக்கத்தை தொலைத்த மக்கள்!
அடுத்த விசாரணை ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறும் என்று துணை அரசு வழக்கறிஞர் மஸ்ரி முகமது தாவுத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சூப்பர் மார்க்கெட் தரப்பில் இருந்து இது தொடர்பாக மன்னிப்பு கேட்டதோடு, அவற்றின் விற்பனையை நிறுத்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டின் மீது இன்று (சனிக்கிழமை) மொலோடோவ் காக்டெய்லை வீசி தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.