Manipur violenc | மணிப்பூர் மாநிலத்தில் குகி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
2023 ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மணிப்பூரில் மைத்தேயி இனத்தவர்கள் பழங்குடியினர் அந்தஸ்து கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி இனத்தவர் நடத்திய போராட்டத்தால் அங்கு வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் 3 குக்கி இன பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவம் நாட்டையே உலுக்கியது.
மேலும் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த மோதலில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பலர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர்.
கலவரங்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் தொடர்ந்து அங்கு வன்முறைச் சம்பவங்கள் நீடித்தபடியே உள்ளன.
இதையும் படிங்க: Delhi Farmers Protest | ”ராணுவ வீரர்களை போல..போராடும் விவசாயிகள்..” ராகுல் தாக்கு!
அப்போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் கீதா மிட்டல், ஷாலினி ஜோஷி,ஆஷா மேனன் ஆகிய 3 பேர் தலைமையிலான இந்த குழுக்கள் மணிப்பூரில் மேற்கொள்ளப்படும்.
மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து அறிக்கை அளிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து சிபிஐக்கு மாற்றப்படாத மற்ற வழக்குகளை 42 சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வு குழுக்களின் விசாரணையை கண்காணித்து அறிக்கை அளிக்க, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தத்தாத்ரே பட்சல்கிகரை நியமித்தும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அண்மைக்காலமாக இயல்புநிலைக்கு திரும்பிய மணிப்பூரில் (Manipur violenc) கடந்த சில தினங்களுக்கு முன்பு குகி சமூகத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆயுதம் தாங்கிய
குழுக்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1758416285497430176?s=20
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுராசந்த்பூர் பகுதியில் உள்ள எஸ்பி அலுவலகத்தை 300-க்கும் அதிகமான குகி இன மக்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
போலீசார் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் வாகனங்கள் தீவைக்கப்பட்டன. இந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
25-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, சுராசந்த்பூர் பகுதி முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.