பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், தனுஷின் ‘அசுரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து வெற்றிமாறனின் ‘விடுதலை 2’, ஆர்யாவின் ‘மிஸ்டர் எக்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே தற்போது ‘விஜய்யின் 69’ வது படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : September 30 Gold Rate : தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
மஞ்சு வாரியர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ஹெச்.வினோத்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது..
“வினோத் துணிவு படத்தில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ஏதாவது ஒரு காட்சியில் சரியாக இல்லாததுபோல் உள்ளது என்று இன்னொரு டேக் கேட்டால் இந்தக் காட்சிக்கு இவ்வளவு போதும், நீங்கள் நன்றாக நடிப்பதற்கு நான் வேறு படம் தருகிறேன் என்று சொல்வார்” என சிரித்தபடி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வினோத் இயக்கும், விஜய் 69 படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தில் நடிகைகள் மமிதா பைஜு, சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பதாகவும் சிம்ரன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.