பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் தமிழகம் விரைகிறார்.
முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த MI-17-V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் மலைப்பாதையில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கி உள்ளது.
ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டரில் பயணித்த மற்றவர்களின் நிலை குறித்து இது வரை தெரியாத நிலையி,ல் இந்த விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு வருகிறார்.
அதே போல் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு நிகழ்விடத்துக்கு விரைகிறார்.