இன்ஸ்டாகிராமில் பழகிய நபரால் கர்ப்பமான 15 வயது சிறுமி youtube வீடியோ மூலம் தனக்குத்தானே பிரசவம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாக்பூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இளைஞர் ஒருவரிடம் instagram chat மூலம் பழகி வந்துள்ளார். தாய் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்து வந்த மாணவி இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாத நபருடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த இளைஞர் அந்த மாணவியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய உள்ளார். இதனை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் மாணவி மறைத்து உள்ளார்.
மேலும் குழந்தை பிறப்பிற்கு மருத்துவமனைக்குச் சென்றால் மாட்டி விடுவோம் எனப் பயந்து youtube பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் மகள் அதிக நேரம் செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக நேரம் சேட் செய்வதைக் கண்டித்து செல்போனை பிடுங்கி வைத்து அவரது தாய் கண்டித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாயின் செல்ஃபோனை மாணவி உபயோகிக்கத் தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தாய் வேலைக்குப் புறப்படவே சிறுமிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
மேலும் youtube வீடியோவை பார்த்து பிரசவம் பார்த்து குழந்தையைப் பெற்றுள்ளார். அதனை அடுத்து குழந்தையின் அழுகுரல் அக்கம் பக்கத்தில் கேட்காத வகையில் குழந்தையின் கழுத்தில் பெல்ட் மூலம் இறுக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் கொலை செய்த அந்த குழந்தையைப் பையில் மூட்டை கட்டி மாடியில் வைத்துள்ளார்.இந்த நிலையில் பணி முடிந்த பிறகு அந்த தாய் வீட்டின் தரையில் ரத்த கரைகளை அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மகளிடம் விசாரித்த பொழுது மாதவிடாய் கரை எனக்கூறிச் சமாளித்துள்ளார். மேலும் அழுது கொண்டே சிறுமி தாயிடம் நடந்ததைச் சிறுமி தெரிவித்துள்ளார்.
இது கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக சிறுமியை மருத்துவமனை அளித்துச் சென்றுள்ளார். மேலும் மருத்துவமனை சார்பில் மூலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவிக்கையில் instagramல் தன்னிடம் தாகூர் என்ற நபர் பழகி வந்ததாகவும், தன்னை அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும்,
அப்பொழுது அவர் மது கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். தீவிர விசாரணையில் மேற்கொண்ட பொழுது அந்த நபர் இன்ஸ்டால் வாய்ஸ் கால் மூலமாகத் தொடர்பு கொண்டு உள்ளதால் செல்போன் என்கூட கிடைக்கவில்லை என்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை ஏமாற்றிய நபர் மீது பாலியல் வன்முறை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்டர்நெட் மூலம் பள்ளி குழந்தைகளுக்குச் சீரழிவதாகவும் குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கப் பெற்றோர்கள் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.