நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் (mahatma gandhi) 76-வது நினைவு தினம் கொண்டாப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் மகாத்மா காந்தியின் (mahatma gandhi )76-வது நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள காந்தி சிலைக்கும் மற்றும் காந்தியின் புகைப்படத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மகாத்மா மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர்,எழும்பூரில் உள்ள அருங்காட்சி வளாகத்தின் ‘வளர்கலைக் கூடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ’காந்தியும் உலக அமைதியும்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை இருவரும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் சாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அருங்காட்சியில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கிற்கு அருகில் செல்ஃபி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காந்தி பற்றிய புத்தகங்களின் முதல் பக்கம் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது.