அம்பேத்கரின் கால் தூசிக்கு கூட மோடி ஈடாக மாட்டார் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் முன்னுரை பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார்.
மேலும் அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “அம்பேத்கருடன் மோடியை ஒப்பீட்டு பேசுவது தவறு. அவரின் கால் தூசிக்குக்கூட மோடி ஈடாக மாட்டார். அதனால் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது ரொம்ப ரொம்ப தவறு” எனத் தெரிவித்துள்ளார்.