Site icon ITamilTv

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு பிரித்தெடுக்கப்போகும் வெயில் – இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா எச்சரிக்கை

hot summer

hot summer

Spread the love

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என ( hot summer ) இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மொஹபத்ரா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

அதிகபட்ச வெப்பநிலை : தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Also Read : கம்பமலா பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கக் மிரட்டல்..!!

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 25.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

29.04.2024 முதல் 01.05.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25.04.2024 முதல் 29.04.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

25.04.2024 முதல் 29.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

Also Read : வெள்ளக்காடான கென்யா – பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு..!!

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு “Hot and humidity weather” என பெயரிட்டுள்ளோம். ( hot summer ) முன்பெல்லாம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தால் அசவுகரியம் இருக்காது. தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம் எனவும் இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version