தமிழகத்தை போல் தெலங்கானா மாநிலத்திலும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு திட்டம்(breakfast scheme) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி கற்பிக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து அதனை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய தெலங்கானா அரசு,தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க மாணவர்களுக்கு இன்று திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ரூ. 400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்.
இந்த கல்வியாண்டு முதல் மாநில அரசு காலை உணவை வழங்க திட்டமிட்டுள்ளது. செவ்வாய்கிழமை முதல் குழந்தைகளுக்கு காலை உணவாக ராகி ஜாவா வழங்கப்படும்.
இந்த உணவு திட்டம் மாணவர் சேர்க்கை, வருகைப்பதிவு, கற்றல் முடிவுகள், அத்துடன் ஊட்டச்சத்து உட்கொள்ளல் மற்றும் விளைவுகள் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் யென தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.