ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் 15 வயது சிறுவனுடன் இரண்டு குழந்தைகளின் தாயான 30 வயது பெண் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், அந்த பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஜூலை 19-ம் தேதி 8-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த நிலையில் சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடிவாடா நகரைச் சேர்ந்த பெண் ஸ்வப்னா என்ற பெண்ணிற்கும் ,அதே பகுதியில் வசிக்கும் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது . கடந்த ஜூலை 19-ம் தேதி 8-ம் வகுப்பு படிக்கும் சிறுவனையும் ஸ்வப்னா என்ற பெண்ணும் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை வெளியேறியுள்ளார்.
ஜூலை 19ஆம் தேதி, அந்தப் பெண் அவரை ஹைதராபாத் அழைத்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.அவரது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு அவர் இருக்கும் இடம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தொலைபேசியின் எண் இருக்கும் இடத்தை கண்காணித்து போலீசார் தேடி வந்தனர். ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பெண் மற்றும் சிறுவனைத் தேடிய போலீஸ் குழுக்கள், மொபைல் போன் சிக்னல்கள் மூலம் அவர்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். ஒரு குழு செவ்வாய்க்கிழமை இரவு ஹைதராபாத் வந்து அவர்களைக் கைது செய்தது.
இதனை தொடர்ந்து பெண் கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் 30 வயது பெண் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.