அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தவறு செய்தால் கட்டாயமாக பலன் அனுபவிக்க வேண்டும் இல்லை என்றால் நிரபராதியாகலாம்.
மாநில அரசு, மத்திய அரசு இன்னொரு பக்கம் மத்திய அரசு பழிவாங்கும் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். உண்மையான தகவலோடு தவறு செய்திருந்தால் அவர்களை விட்டு விட முடியாது. ஆனால் மத்திய அரசு மாநில அரசே ரைடே செய்யக்கூடாது என கூற முடியாது. எந்த உள்நோக்கு இல்லாமல் தவறு செய்பவர்கள் தண்டிப்பதை நாம் தடுக்க முடியாது.
திமுகவின் ஆக்சிஜனால் தான் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, அ.தி.மு.க. ஆக்சிஜனால் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்பதை முதலில் அவர் ஒப்புக்கொண்ட பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்யலாம்.
தமிழ்நாட்டை தனித் தமிழ் நாடாக பிரிப்பது சாத்தியமில்லை. அது இந்தியாவின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும்.இளையராஜாவிற்கு எம்.பி. பதவி கொடுத்தது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ந்து மக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.