கணவரின் காதலிக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் திடுக்கிடும் தீர்ப்பை வழங்கி உள்ளது.
தனது கணவரின் காதலியால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்த மனைவி. ‘கணவரின் காதலி எந்தவிதத்திலும் உறவினர் இல்லை’ என அறிவுரை கூறி வழக்கை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read : ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பாட தடை..!!
இந்திய தண்டனைச் சட்டம் 498a-ன் படி கணவர் அல்லது அவரின் உறவினரால் ஒரு பெண் குடும்ப வன்முறைக்கு ஆளானால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இது சட்டத்திற்கு புறம்பான உறவு என்பதால் இந்த குற்றப்பத்திரிகையே சட்டவிரோதமானது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது .