“நாலணா (25) பைசா அளவில்” சுபாஷ் சந்திரபோஸ் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு.. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக “நாலணா (25 பைசா) அளவில்” சுபாஷ் சந்திர போஸ் உருவத்தை மினியேச்சர் ஓவியமாக வரைந்தார்.
சுதந்திர தினத்தன்று நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக துணிச்சலைக் கௌரவிக்க இந்த சிறப்பு நாள் ஒரு சாதாரண தேதி அல்ல: இது இந்தியாவின் வீரம், வலிமை மற்றும் தோற்கடிக்க முடியாத உறுதியை பிரிதிபலிக்கிறது.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திர போராட்டத்தில் செய்த தியாகங்களால் இந்த நாளின் முக்கியத்துவம் உணர முடிகிறது, சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் உயிர் இழந்துள்ளனர், நம்மை சுதந்திரத்தில் சுவாசிக்க தங்கள் அனைத்து தியாகம் செய்தவர்களை நினைவுக் கூர இந்த நாள் நினைவூட்டுகிறது.
நமது சுந்தரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவும், இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான வழியில் சம்பாதித்துள்ளது என்பதையும், அதை நாம் மதிக்க வேண்டும் என்பதையும் கூறும் விதமாக.. பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் “நாலணா (25) பைசா அளவில்” சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் உருவத்தை மினியேச்சர் ஓவியமாக இரண்டு நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் நாலணா காசு அளவுல சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் படம் வரைந்தது அருமை என்று ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள், சுந்தரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் நினைவூட்டினார்கள்.