காதல் மன்னன் உலக நாயகன் கமல்ஹாசனுடன் காதல் காட்சியில் நடித்தால் நிச்சயமாக முத்த காட்சியில் (Kiss Scene) நடிக்க வேண்டும் என்கிற பயத்திலேயே நயன்தாரா உட்பட தெறித்து ஓடிய ஒரு சில நடிகைகள் யார் தெரியுமா?
கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆனால், இதுவரை கமல்ஹாசனுடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. கமலுடன் நடிக்க சில படங்களில் வாய்ப்பு கிடைத்த போதும்,
அவருடன் லவ் காட்சியில் நடித்தால் கண்டிப்பாக முத்த காட்சி இருக்கும் என்றும், அது தனக்கு செட் ஆகாது என்பதாலும் தான் நயன், கமலுடன் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழில் கரகாட்டக்காரன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, 90-களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. இவர் நடிகை தேவிகாவின் மகள்.
தமிழ் சினிமாவில் டாப்பில் இருந்த காலகட்டத்தில், கமலுடன் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் முத்த காட்சிக்கு பயந்தே வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டாராம்.
இதையும் படிங்க : Alliance : மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி உறுதி – பொதுக்குழுவில் முடிவு!
90-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நதியாவின் கால் ஷீட்டுக்கு மிகப்பெரிய போட்டியே நிலவியது.
தமிழில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் நதியா.
இந்நிலையில், கமலை நதியாவுடன் டூயட் பாட வைக்க வேண்டும் முயற்சி செய்த நிலையில், முத்த காட்சிக்கு பயந்து வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்து விட்டாராம்.
இதையும் படிங்க : ராமனும் கட்டுக்கதையும் – புராணம் சொல்லும் முகில்
தெலுங்கு நடிகையான நடிகை ரோஜாவுக்கு தமிழில் தற்போது வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த போதிலும், கமல்ஹாசனுடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.
அதற்கு காரணம் கூட படத்தில் முத்த காட்சியில் (Kiss Scene) கண்டிப்பாக இருக்கும் என்பதால் தானாம்.
இப்படி ஒரு சில நடிகைகள் கமல் ஹாசனுடன் முத்த காட்சியில் நடிக்க மறுத்தாலும், ஆண்ட்ரியா, கௌதமி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ,
மது ஷாலினி, அபிராமி போன்ற நடிகைகள் அவருடன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.