New projects | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ரூ. 31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்து,
இக்கட்டடத்தின் முதலாவது இடஒதுக்கீடு ஆணையை திருவாளர்கள் SUV Startup Space நிறுவனத்தின் திரு. எஸ்.யுவராஜ் அவர்களிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து,இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 592.38 கோடி மதிப்பீட்டில் 36 திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள்
தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள்இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், கலையரங்கம், அர்ச்சகர் மற்றும்
பணியாளர் குடியிருப்பு, பக்தர்களுக்கு ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் அமைக்கும்பணிகள், வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தல், ஆன்மிக கலாச்சார மையம்,
உதவி ஆணையர் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறை கட்டடங்கள், ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ. 15.34 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2
மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும்தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில்
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1758796150315073941?s=20
வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ. 31 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டில் ரூ. 59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர்(New projects) திறந்து வைத்தார்.