கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது காமுக ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து மாவு கட்டு போட்டுள்ளனர்.
இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டல் சம்பவத்தை தொடர்ந்து தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஆட்டோக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
Also Read : ‘தயாநிதி’ என்ற பெயரே சமஸ்க்ரித பெயர் தான் – நாராயணன் திருப்பதி..!!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை
காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்
கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்
பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.