கொரோனா பரவல் சமீபமாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடபட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சில கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொரோனா பரவல் சமீபமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ளார்.
அதன்படி கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை, கல்லூரி விடுதிகளில் கூட்டமாக உணவருந்த தடை, சுழற்சி முறையில் சமூக இடைவெளியுடன் வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் தகுதியான மாணவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளதோடு இதனை கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.