கேரளாவில் புதியவகை வைரஸ் பரவி வருவதால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே கேரளாவில் தான் மிக மோசமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் தற்போதும் கூட தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகை நோரோ என்ற வைரஸ் பரவி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வயநாடு பகுதியில் இதுவரை 13 பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.