ஊர் ஊராகப் போய் லாட்ஜ்களில் ரூம் போட்டு ‘ஆண்மை’ ஆராய்ச்சி செய்யும் ஆட்களின் வரிசையில் ஒருவர் இப்போது இணைந்து இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் முக ஸ்டாலின் மீசை வைத்த ஆம்பிள்ளையாக இருந்தால் அடைத்து வைக்கபட்டு இருக்கும் வாக்காளர்களை திறந்து விட்டு தேர்தலை எதிர்கொள்ளட்டும் என பேசி இருந்தார்.
இதற்க்கு ஏற்கனவே கனிமொழி ,ஆ ராசா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் இன்றைய நாளில் வந்த முரசொலியும் கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முரசொலி கடும் விமர்சனம்:
அதில்,ஊர் ஊராகப் போய் லாட்ஜ்களில் ரூம் போட்டு ‘ஆண்மை’ ஆராய்ச்சி செய்யும் ஆட்களின் வரிசையில் ஒருவர் இப்போது இணைந்து இருக்கிறார். அவர் ஈரோட்டில் ரோட்டில் நின்று கொண்டு ஆண்மை இருக்கிறதா?’
என்று தெருவைப் பார்த்துக் கேட்கிறார். ஆம்பளையா இருந்தா வா” என்று அழைக்கிறார். “மீசை வெச்சிருக்க வேண்டும்’ என்கிறார். ஆத்திரக்காரனுக்கு எதுவும் இருக்காது என்பது அவரது உடல்மொழியில் இருந்தே தெரிகிறது.
இவ்வளவு ஆத்திரம் ஒருவருக்கு வருவானேன்? ஈரோடு கிழக்கில் தோற்றுப் போகப் போகிறோம் என்ற பயமா? சட்டமன்றத் தேர்தலிலேயே தோற்றுப் போன பிறகு வராத ஆத்திரம் இப்போது ஏன் வர வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் பன்னீர் மகன் தவிர அனைவரும் தோற்றபிறகும் வராத ஆத்திரம் ஏன் இப்பொழுது வந்திருக்கவேண்டும்.
மேலும் ஜெயலலிதா இவை அனைத்தையும் கொடுத்துவிட்டுத்தான் போனார். அவை அனைத்தையும் நாசம் செய்த போது வராத ஆத்திரமும் கோபமும் இப்போது ஏன் வர வேண்டும்? ஏன் என்றால் இப்போது சொந்தக் கட்சியையும் இழந்து, அதாவது வேட்டியையே இழந்து நிற்பதால் ஆத்திரம் அதிகமாக வரத் தானே செய்யும்?
இடைக்கால தற்காலிக அரைகுறைப் பொதுச்செயலாளராக அ.தி.மு.க.வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த உதவாக்கரை பதவியையும் தக்க வைக்க முடியவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும்?
ஜெயலலிதா இவை அனைத்தையும் கொடுத்துவிட்டுத்தான் போனார். அவை அனைத்தையும் நாசம் செய்த போது வராத ஆத்திரமும் கோபமும் இப்போது ஏன் வர வேண்டும்? ஏன் என்றால் இப்போது சொந்தக் கட்சியையும் இழந்து, அதாவது வேட்டியையே இழந்து நிற்பதால் ஆத்திரம் அதிகமாக வரத் தானே செய்யும்?
இடைக்கால தற்காலிக அரைகுறைப் பொதுச்செயலாளராக அ.தி.மு.க.வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த உதவாக்கரை பதவியையும் தக்க வைக்க முடியவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும்?
கட்சியில் நான்கு பேரை கப்பம் கட்டுவதற்காக வைத்திருந்தார் ஜெயலலிதா. சொறி, சிரங்கு, படை, தேமல் என்று அ.தி.மு.க. பெண் அமைச்சர் ஒருவரே அப்போது கமெண்ட் அடிப்பார். அந்த நால்வரில் ஒருவராக இருந்தவர் இவர். ஒழுங்காக போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதால் ஜெயலலிதாவை விட சசிகலாவின் அனுக்கிரகம் அதிகமாக இவருக்கு இருந்தது.
பன்னீர் கம்பி நீட்டியதும் இவருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார் சசிகலா. டேபிளுக்கு கீழே போய் ஊர்ந்து போய் காலைத் தேடி மீசையில் மட்டுமல்ல-வேட்டி யிலும் கூவத்தூர் அழுக்கு பட உருண்டு போய் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்க்கு மீசை இருந்தால் ன? வேட்டி விலகினால் என்ன? சட்டை கிழிந்தால் என்ன? என கடுமையாக முரசொலி விமர்சித்து உள்ளது.