வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அந்த வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிவாயு விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில்,வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் கடந்த மாதம் ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை ரூ.2021.50 ஆக குறைந்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ. 1,118.50 ஆக தொடர்கிறது.