தென் மாவட்டங்களில் தொடரும் சாதி கொலைகள் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,” பைசன் திரைப்படம் சம்மந்தபட்ட படம் . இதில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படபிடிப்பு ஒரு மாதம் நிறைவு செய்துள்ளது. அடுத்தகட்ட படபிடிப்பு தூத்துக்குடி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது என தெரிவித்தார். மேலும் இந்த திரைபடம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
தொடர்ந்து பேசிய அவர்,” விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு,யார் வந்தாலும் சந்தோஷம் தான் என்று தெரிவித்தார்.ஓ டி டி தளங்களில் மற்றும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் திரையரங்குகளில் வந்து பார்க்க ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது . இது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
எல்லார் வீடுகளிலும் பூஜை அறையில் சாமி புகைப்படங்கள் இருக்கிறது. ஆனால் மக்கள் அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமியை வழிபாடு நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.பூஜை அறை இருந்தாலும் கோவில்களின் செல்லும் மக்கள் இன்னும் குறையவில்லை.
அதுபோல தான் சினிமாவும் மக்களால் கூடி பார்க்கக் கூடியது தான் சினிமா. ஓ டி டி தளம் என்பது லைப்ரரி மாதிரி. மக்கள் பார்த்த படங்களை திரும்பி திரும்பி பார்க்கவும் புதிய படங்களை பார்க்கவும் உதவுகிறது. மேலும் ஓ டி டி தளத்தை பொருத்தவரையில் சினிமா திரையரங்குகளுக்கு வரும் மக்களின் வருகை குறைய வாய்ப்பில்லை என தெரிவித்தார். ஓ டி டி வேறு திரையரங்கம் வேறு என தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் பயன்படுத்தினார்களா விஜய், திரிஷா? – புதிய சர்ச்சை
தொடர்ந்து பேசிய அவர் தென் மாவட்டங்களில் தொடரும் ஜாதி படுகொலைகள் குறித்த செய்தியாளர் கேள்விக்கு, ” அடிப்படையான மாற்றங்கள் தேவைப்படுகிறது. இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதனை ஒரே அடியாக மாற்ற முடியாது.
சாதிப்படு கொலைகள் அனைத்தும் காலமாக நடந்து வருபவை. இந்த சம்பவங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்காமல் வடுவாக உள்ளது. இதை ஒரே நாளில் மாற்றக்கூடிய சூழல் இல்லை .இந்த படுகொலைகள் அனைத்தும் உளவியல் ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து பேசியவர் அரசியல் சட்டம் போன்றவற்றைகளில் இருந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டும் தான் இதனை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார். அப்படி செய்தால் தான் அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.