பிரபல யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் வி.ஜே. சித்து தனது பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி குறுகிய காலத்தில் குறுகிய காலத்திலேயே 2.58 மில்லியன் (25.8லட்சம்) ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி சினிமா பிரபலங்கள் தங்களது படத்தின் புரமோஷனுக்காக இவரது மொட்டை மாடி பார்டி எனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பிரபலம் அடைந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அஜாக்கிரதையாக செல்போனில் பேசிய படியே காரை இயக்கியதாக யூடியூபர் வி.ஜே. சித்து மீது சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதில் யூடியூபர் வி.ஜே. சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாகவும் இதுசம்பந்தப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிட்ட நிலையில்,
அதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் எனவும் வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய சித்து மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வி.ஜே.சித்துவின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும் ஷெரின் புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபகாலமாக யூடியூபர்கள் மீது தொடரும் குற்றச்சாட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக யூடியூபர் மணி, இர்பான், டிடிஎப் வாசன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.