பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று பழங்காலத்தில் கூறுவார்கள்.ஆனால் இந்த பழமொழிலிக்கு மாறாக இந்தியாவில் நடந்துள்ளது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உறங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது நாகப்பாம்பு ஓன்று படமெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாவட்டத்தில் உள்ள அப்சல்புராவின் மல்ல கிராமத்தைச் சேர்ந்த பகம்மா ஹனமந்தா என்ற விவசாயப் பெண் .இவர் தனது வயல் வேலையை முடித்துவிட்டு களைப்பில் ஓய்வெடுக்க அவரது தோட்டத்தில் உள்ள மாமரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென நாகப்பாம்பு தன் முதுகில் மேலேறி படம் எடுத்தபடி நின்றது. அது எந்த நேரத்திலும் தீண்டலாம் என்ற சூழலில், அருகே நின்றிருந்த கண்ணு குட்டியும் அதனைக் கவனித்தபடி திகைத்து நிற்கிறது.
இதனைத் தொடர்ந்து தனது முதுகில் நாகப்பாம்பு மேலேறியதை அறிந்தவுடன், பகம்மா ஹனமந்தா ஸ்ரீல மல்லையா என்ற சிவனின் நாமத்தை உச்சரித்து அவரைப் பாதுகாக்குமாறு வேண்டினாள். இதனைத் தொடர்ந்து அதிர்ஷ்டவசத்தில் நாகப்பாம்பு தன் முதுகில் சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தும் எந்த பாதிப்பும் தீங்கு செய்யாமல் சென்று விட்டது எனத் தெரிவித்து உள்ளார்.
https://twitter.com/susantananda3/status/1563860023494995970?s=20&t=H0-185dAIOp0OSotBGpYtQ
மேலும் இது குறித்து ஊர் பொது மக்கள் தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு தனது மகன் இறந்துவிட்டதாகவும், அவர் தூங்கிக்கொண்டிருந்த அதே தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகவும் பாகம்மாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அது அவளுடைய மகன் பாம்பு வடிவில் வந்து தன் தாயைப் பார்க்க வந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.
உறங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது நாகப்பாம்பு ஏறி படமெடுத்த போதிலும் எதுவும் செய்யாமல் சென்ற சம்பவம் அந்த கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.