மே 30 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்த ஏப்ரல் மாதம் 19 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எழுகட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் , தற்பொழுது வரை ஆறு கட்ட வாக்கு பதிவு நிறைவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்கிறது.
இந்நிலையில், தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பரப்புரை முடியும் நாளில் கன்னியாகுமரிக்கு வந்து, வினேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: விளைநிலத்தில் தோண்ட தோண்ட வைர கற்கள் – குஷியில் விவசாயிகள்!
இதற்காக, டெல்லியில் இருந்து 30-ஆம் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார்.
பின்னர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், 31-ஆம் தேதி காலை தியானத்தை தொடங்கவுள்ளார்.
24 மணி நேர தியானத்திற்குப் பிறகு ஒன்றாம் தேதி காலை, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.