“புல்வாமா தாக்குதல் நம்முடைய தவறால் நடந்தது என பிரதமரிடம் கூறினேன் இதுகுறித்து, பொதுவெளியியில் வாயை திறக்க வேண்டாம் என அவர் கூறிவிட்டார் என சத்யபால் மாலிக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2019 பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் வாகனம் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள்உயிரிழந்தனர்.புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பயங்கர பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று நாட்டையே உலுக்கியது.
பிப்ரவரி 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் போது அப்போதைய காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் அண்மையில் அவரரிடம் நடத்திய நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளிபடுத்தினார்.
அதில்,புல்வாமா தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்கு CRPF சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்கப்பட்டது; ஆனால், உள்துறை அமைச்சகம் அதனை மறுத்துவிட்டதாகவும் அதனால்தான், வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்; வீரர்கள் சென்ற பாதையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை; இதன் விளைவாக, புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும் புல்வாமா சம்பவத்தில் 300 கிலோகிராம் RDX வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற கார் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும், ஜம்மு காஷ்மீர் சாலைகள் மற்றும் கிராமங்களில் 10-15 நாட்களாக யாருக்கும் தெரியாமல் சுற்றித் திரிந்ததால், புல்வாமா சம்பவத்தில் பெரும் உளவுத்துறை தோல்வி ஏற்பட்டது என்றும் மாலிக் கூறினார்.
இது நம்முடைய தவறால் நடந்த உயிரிழப்பு என பிரதமர் மோடியிடம் கூறினேன்.அதற்கு, இதுகுறித்து பொதுவெளியில்வாயை திறக்க வேண்டாம் என அவர் கூறிவிட்டார்”மேலும் பாகிஸ்தான் மீது பழியை சுமத்தி அரசாங்கத்திற்கும் பாஜகவிற்கும் தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதே இதன் நோக்கம் என்பதை உடனடியாக உணர்ந்ததாக மாலிக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.