பயணி ஒருவர்இன்டிகோ விமானத்திற்குள் எச்சில் துப்ப ஜன்னலை திறக்க வேண்டும் என கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தேஜஸ்வி சூர்யா மற்றும் அண்ணாமலை பயணிக்கும்போது எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்துஅண்ணாமலை, “சூர்யா அவசர வழிக்கு அருகில் அமர்ந்திருந்தார். ஏடிஆர் விமானங்களில் இருக்கைகளுக்கு ஹேண்ட் ரெஸ்ட் இல்லை, சூர்யா கதவில் கை வைத்துள்ளார்.
இதனால், கதவு லேசாக திறந்தது. இதனை உடனடியாக விமான ஊழியர்களின் கவனத்திற்கு சூர்யா கொண்டு சென்றார். விமானியே நிலைமையைக் கையாண்டார்அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் விமானத்தில் பயணிக்கும்போது எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “நான் கோயம்புத்தூர் செல்ல இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்ஸி எக்ஸிட் அருகே தற்போது அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் இந்த எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறக்கபோவதில்லை.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது
விமானத்திற்குள் பயணத்தின் போது பயணிகள் சேட்டைகள் செய்யும் சம்பவங்கள் சமீப காலமாகவே அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளது . அந்த வகையில் தான் இன்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் விமான சிப்பந்தி பெண்ணிடம் வைத்த பகீர் கோரிக்கை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோவிந்த் சர்மா நபர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இன்டிகோ விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் விமானத்தில் அமர்ந்துள்ள நிலையில் விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருக்கிறது.
அப்போது ஜன்னல் சீட்டில் அமர்ந்திருக்கும் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை அழைத்து ப்ளீஸ் ஜன்னல் கதவ கொஞ்சம் திறக்குறீங்களா, குட்கா எச்சிலை நான் துப்பனும் என்று கூற, பணிப்பெண் ஒரு நிமிடம் திகைத்துப்போய் பின்னர் சிரிக்கிறார். தொடர்ந்து பயணியும் அருகில் இருந்தவர்களும் சிரித்தனர்.
மேலும் இந்த சம்பவம் Prank விளையாட்டை போல அந்த பயணி பணிப்பெண்ணிடம் ஜாலியாக ஜன்னலை திறந்து விடுங்கள் எனக் கேட்டுள்ளார். அந்த பயணியின் பெயரும் அடையாளமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த இன்ஸ்டா வீடியோ வைரலாக பரவி தற்போது டிரெண்டாகி வருகிறது.