வட இந்தியாவில் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனைகள் நடந்தன.
போதைப்பொருள்,பயங்கரவாத கும்பல்,குண்டர்கள் தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான சீக்கியர்களுக்கான நீதியின் (SFJ) உறுப்பினரான ஜஸ்விந்தர் சிங் முல்தானியின் உறவினர்களின் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சமீபத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.