2022-23 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.125 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும் வங்கி நிர்வாகமும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த 13-11- 2022ஆம் நாள் மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.119 கோடி என்ற இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.125.98 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 3122, இவர்களில் 2533 பேருக்கு 125.98 கோடி கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமஸ்ய கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 81% பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள கல்விக்கடனில் தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் 2166 மாணவர்களுக்கு ரூ.111.48 கோடி வழங்கியுள்ளன. 19 தனியார் வங்கிகள் 367 பேருக்கு ரூ.14.50 கோடி வழங்கியுள்ளன. கனரா வங்கி 468 மாணவர்களுக்கு ரூ.42.57 கோடி வழங்கியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 989 மாணவர்களுக்கு ரூ.32.80 கோடி வழங்கியுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்து அதிக கல்விக்கடன்
வழங்கியுள்ள இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குக் கடன் வழங்கப்பட்ட சதவிகித அளவென்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 93% கடன் வழங்கியுள்ளன. ஆனால் தனியார் வங்கிகளோ 45%
விண்ணப்பங்களுக்கு மட்டுமே கடன் வழங்கியுள்ளன. இது குறித்து வங்கிகள் கூட்டத்தில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் ரூ.100 கோடிக்கு மேல் தரப்பட்டுள்ளது இது ஒரு சாதனை அளவாகும். இந்த ஆண்டு ரூ.125 கோடியையும் தாண்டி மாநிலத்தில் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேப்போல கல்விக்கடன் கேட்டு விண்ணாப்பித்தவர்களில் 81% பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் சிறந்த
முன்னுதாரணம் ஆகும். இதற்காக தொடர்ந்து உழைத்திட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் வங்கிகள் நிர்வாகத்திற்கும் எனது
பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக அதிக தொகையை கல்விக்கடனாக வழங்கியுள்ள சுனரா வங்கியின் சார்பில் துணைப்பொது மேலாளர் சுஜித் குமார் சாகு அவர்களையும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின் சார்பில் முதன்மை மேலாளர் ராம்பிரசாத் அவர்களையும் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அளில் மற்றும் சந்தாண பாண்டியன் ஆகியோர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பாராட்டி கெளரவித்தார்