சீனாவில் 2019ல் உருவாகிய கொரோனா தொற்று இந்தியாவில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் BF 7 வகை கொரோனா வைரஸ் மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் 1.75 லட்சம் படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்,தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு களை தமிழக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்த்து 1.75 லட்சம் மொத்த படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சீனாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் நிலையில்,முகக் கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவதை கடைப்பிடிக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திடவும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
ஆரம்ப சுகாதார திறப்பு:
இந்த நிலையில்,தமிழக அரசு சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பில் காஞ்சீபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், ஶ்ரீபெரும்புதூர், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், வளத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடங்கள், திருப்புட்குழி சித்த மருத்துவப் பிரிவு கட்டிடம், பரந்தூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 9 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா ஶ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்:
கொரோனா வைரஸ் தோற்று உருமாறிய கொரோனா வைரசாக மாறியுள்ளது.இதன் தாக்கம் ,சீனா மட்டுமல்ல தைவான், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில்அதிக பரவி வருகிறது. சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் உயிர் இழப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் கொரோனா வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை, கொரோனா வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.