எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்(thirumaavalavan) வின் 60வது பிறந்தநாள் விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்(vettrimaran) , “திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து மன்னராக சித்தரிப்பது என எங்களின் அடையாளங்கள் மிக விரைவாக எங்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றன.
சினிமாவில் பல அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன, இந்த அடையாளங்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்றும் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று பேசினார். இதற்கு ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா? என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன், இயக்குனர் வெற்றிமாறன் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார். உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சை மண்ணில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் ராஜராஜ சோழன்.
ஆனால், அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்து மத கலாசாரம் மற்றும் அடையாளங்களை அழிக்க பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் வெற்றிமாறனின் பேச்சு என குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து?
இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை.. (1/2) pic.twitter.com/cWQkPBdqq2
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 4, 2022
இந்த காலத்தில்,1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “கலை என்பது அரசியல் சார்ந்தது, ஆனால் திருமாவளவன் அதைவிட ஒரு படி மேலே சென்று ஒருமுறை என்னிடம் சொன்னார், ‘நம்முடைய வாழ்க்கையே அரசியல். தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு குறிப்பிட்ட அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம்.