பண்டிகை தினங்களில் சென்னை உள்ள பொது மக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்த நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ரயில்களின் டிக்கெட் விற்று தீர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தங்களது சொந்த ஊறுகளுக்கு செல்ல பேருந்துகளில் முன் பதிவு நிறைவு செய்யப்பட்டு உள்ளது.இன்னும் 4 நாட்களே பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் முக்கிய பேருந்து நிலையங்களான கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 340 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.