மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரி சந்தித்து ஆசிப்பெற்றார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக உதயநிதிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டின் தொடக்கமாக முதலில் முனியாண்டி சாமி காளை படி அவிழ்க்கப்பட்டது. பாரம்பரிய வழக்கப்படி அதனை யாரும் பிடிக்கவில்லை.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியில் 1000காளைகள், 350 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெறவுள்ளது.போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது.போட்டியின் போது சிறப்பாக விளையாடக்கூடிய காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன
போட்டி முழுவதிலும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக பதிவுசெய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக மருத்துவபரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்
50அடிக்குள் காளைகளை அடக்கும் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், எல்கைக்குள் காளையின் திமிலை பிடிக்கும் வீரரை 3 முறை சுற்றுவதற்குள் காளை கீழே வீழ்த்தினால் காளை வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்படும்.
மேலும் காளை கொம்பை பிடிப்பதோ, காளையை இருவர் அடக்குவதோ, காளையின் வாலை பிடித்தாலோ விதி மீறியதாக மாடுபிடி வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவர்.போட்டியின் போது மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் வீரர்களை கண்காணிக்க சிறப்புகுழு அமைப்பு
போட்டியில் கலந்துகொள்ள போலியான ஆவணங்களை பயன்படுத்தி காளை உரிமையாளரோ, மாடுபிடி வீரர்களோ கலந்துகொண்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போட்டியில் காளைகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் போட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக 2000காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
காலை 8மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கவுள்ளது.முதலில் கிராமகோவில் காளைகளான அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவில் காளை, அரியமலை கோவில் காளை, வலசை கருப்புகோவில் காளை ஆகிய 3 காளைகள் வாடிவாசல் வழியாக அனுப்பபடும்.
பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும்