சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோகளை பார்த்து பின்பற்றிய தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தமருத்துவர் பெருமைக்காக இணையதளத்தில் தனது வீடியோ பதிவுகள் மூலம் குழந்தை பிறப்பு, கர்ப்பம் உடல் எடை அதிகரித்தல் போன்றவை குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.குறிப்பாக,
நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும் குப்புறப் படுத்து உறங்கிய நாள் மார்பக புற்று நோய் வரும்.. மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும் ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ வரை எடை கூடும் பல்வேறு கருத்துக்களைத் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில்,பலர் ஷர்மிகாவின் கருத்துக்களுக்குப் பலர் எதிர்ப்புகள் தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் வந்தனர்.
இதனையடுத்து சித்த மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி மின் அஞ்சல் மூலம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சித்த மருத்துவர் சார்மிகா இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்ப சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த புகாரில் சித்த மருத்துவ சர்மிளாவின் வீடியோக்களை பார்த்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரண்டு பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே மருத்துவர் ஷர்மிகா மீது விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யபட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.