சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் (அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம்) சார்பில் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கான பயிற்சி அளிக்கபட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், இதில் கிராமப்புரங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய குடிமைப் பணி தேர்வில் பங்கேற்கும் பட்டதாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில்’எண்ணித் துணிக’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழச்சியில் கலந்து கொண்டு பேசியஆளுநர் ஆர்.என்.ரவி,குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற கடின உழைப்பு, தீவிர பயிற்சியுடன் இலக்கை நோக்கி ஒரு தவம்போல தீர்க்கமாக இருக்க வேண்டும். தற்போதைய நவீனகால தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது கவனத்தை பரவலாக சிதறடிக்கக்கூடிய அம்சங்கள் அதிகம் உள்ளன. அதனை பொருட்படுதாதமல் குறிக்கோளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் தங்களைச் சுற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு, தொடர்ந்து வெற்றியைநோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். உங்கள் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்.
எந்த சூழநிலை வந்தாலும் அதை சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இதில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.