தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைய வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகார் இளைஞர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வும் பலர் கொல்லப்படுவதாகவும் வட இந்திய மாநிலங்களில் சமூக வலைதளங்களில் வதந்திகளும் பரவி வருகின்றது.இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது வதந்திகள் என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டு இருந்தது.
இந்த நிலையில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 3 மணி நேர பணி சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதனிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 5, 2023
இதனை தொடர்ந்து ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் உள்ளது” என்று கூறினார்.