முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.2023ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
மேலும் இந்த கூட்டத்தில் திமுக பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள், அரசின் திட்டங்களின் பலன்கள் தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதி செய்வது தொடர்பாக திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில்,ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,கூட்டுறவு சங்களுக்கு பணி நிரந்தர ஆணை தொடர்பான சட்டம் போன்றவைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்ப பெறப்பட்டது.ஆளுநரின் உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. அறிவிக்க உள்ள துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாக ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாகவும், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவது தொடர்பாகவும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.