கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா(corona) பாதிப்பு மிக மோசமான ஒரு பாதைப்பையும் , இழப்புகளையும் ஏற்படுத்தியது .
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் முடங்கி போனது .கொரோனா வேக்சின், வழிகாட்டுதுதல்கள் என பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு இப்போது தான் கட்டுக்குள் வந்தது .
இதற்கிடையே பல மாதங்கள் கழித்து இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா அதிகரிக்க ,கேரளாவில் கொரோனா அதிகரிப்பே இதற்கு காரணமாகும் . கேரளாவில் மட்டுமின்றி இப்போது தமிழ்நாட்டிலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இம்மாத தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது .