விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறாததால், இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை அடுத்து ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்காக வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில்,” திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக – பாமக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டனர். மேலும் அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணித்துள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் :ஸ்ரீமதியின் தாய் செல்வி போட்டி? – வெளியான முக்கிய தகவல்!
மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும்.
இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 26) 29 பேர்களில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 29 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.