தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பாமக உறுப்பினர் ஜி.கே.மணியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை 21 ஆம் தேதி முதல் . 29 தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் (4 ஆம் நாள்) இன்றைய நாள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வந்தனர்.
இதையும் படிங்க: BREAKING | சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு!
அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழக சட்டப்பேரவையில், முன்னதாக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு நிறைவேற்றப்பட்டு இருந்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்தில் சாதிவாரி கனக்கடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது .அதற்க்கு பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி ஆதரவு தர வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் திருப்பதி இல்லையெனக் கூறி அவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.