ஈழத்துக்காக நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த போது பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்னதால் தான் அவரை நம்பி போராட்டத்தை முடித்தேன் என விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மே17, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர்,2009 ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த போது ஈழ விடுதலைகாக போராடியவன் நான். ஈழ விடுதலை அரசியலை சர்வதேச பார்வையோடு அணுக வேண்டும் என்று நினைத்தேன்.
திமுக கூட்டணியில் இருந்து போதே ஈழ போரை நிறுத்து என்று இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தவன் திருமாவளவன். அப்போது என்னுடன் 4 நாட்கள் துணையாய் இருந்தது பாவணர் அவர்கள் மட்டுமே. ஆனால் இந்த போரை அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்து செல்ல சரியான வழிகாட்டி இல்லை என வருத்தம் தெரிவித்தார்.
மேலும் அதற்கு நெடுமாறன், நடராஜன், டாக்டர் ராமதாஸ் இன்னும் அதிமுக கூட்டணியில் இருந்த சிலரும் ஆதரவளித்தனர்.இதனையடுத்து திமுகவின் ஆட்சியை கவிழ்க்கவே அதிமுகவைச் சேர்ந்தவர்களுடன் ”திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம் நிகழ்த்துவதாக கருத்து பரப்பப் பட்டது.
எனினும் ஆற்காடு வீராசாமி, கி.வீரமணி உள்ளிட்டோர், ‘தலைவர் கலைஞர் அவர்கள் சங்கடப்படுகிறார், போராட்டத்தை கைவிடுங்கள்’ என கூறினார்கள்.ஆனால் அப்போது போராட்டத்தில் நான் மிகவும் நம்பிய நபர் பாமக நிறுவனர் ராமதாஸ் தான்.
அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பிறகே போராட்டத்தை கைவிட்டேன்” என தெரிவித்தார்.